அண்மைய செய்திகள்

recent
-

மது என நினைத்து அமிலத்தை குடித்த நபர்: உணவு குழாய் எரிந்து பலியான பரிதாபம்


ஸ்பெயினில் உள்ள மது அருந்தும் விடுதியில் ஒயின் வகை மது என நினைத்து தவறுதலாக அமிலத்தை குடித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயினின் நாட்டின் Castellón மாகாணத்தில் உள்ள Benicarló நகரில் Raconet என்ற மது அருந்தும் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதிக்கு வாரத்தின் இறுதி நாளில் Andrés Lorente (49) என்பவர் வந்து மது அருந்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 14ம் திகதி மாலை வேளையில் விடுதிக்கு வழக்கம்போல வந்த நபர், அருந்துவதற்கு ஒயினை கேட்டுள்ளார்.

குளிர் சாதனப்பெட்டியில் ஒயின் பாட்டிலில் வெள்ளை நிறத்தில் இருந்த திரவத்தை அவருக்கு அளித்துள்ளனர்.

திரவத்தை வாங்கிய அவர், அதனை ஒரு வாய் குடித்த உடனே, அவரது உணவு குழாய் முழுவதும் தீ பற்றி எரிவது போல் உணர்ந்து வலியால் துடித்துள்ளார்.

உடனடியாக தண்ணீரை வரவழைத்து குடித்த பின்னரும், அந்த எரிச்சல் குறையாமல் அதிகரித்தவாறே இருந்துள்ளது.

சற்று நேரத்தில் அவர் மயங்கி விழுந்ததால் அவசர மருத்துவ வாகனத்தை விடுதி உரிமையாளர்கள் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதியில் பொலிசார் நடத்திய விசாரணையில், தரை மற்றும் கழிவறையை சுத்தப்படுத்தும் அமிலத்தை ஒயின் பாட்டிலில் நிரப்பி அதனை தவறதலாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரை சிகிச்சைக்கு உட்படுத்தும் முன்னரே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மருத்துவர் José Antonio Martín, சுத்தப்படுத்தம் அமிலத்தை சில துளிகள் குடித்தாலும், அவை உணவு குழாய், நுரையீரல் மற்றும் உடலில் உள்ள உள் உறுப்புகளை மிக மோசமாக பாதித்து உயிரையே பறித்து விடும் என தெரிவித்துள்ளார்.

அமிலத்தை அருந்தியதால் உயிரிழந்துள்ள நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து மது அருந்தும் விடுதியின் உரிமையாளர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது என நினைத்து அமிலத்தை குடித்த நபர்: உணவு குழாய் எரிந்து பலியான பரிதாபம் Reviewed by Author on June 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.