ஐ.நா.விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் வரை பிற்போடுங்கள் : அமெரிக்காவில் அமைச்சர் மங்கள கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை பல மாதங்களுக்கு பிற்போட இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஏ.பி. செய்தி சேவைக்கு அமெரிக்காவில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த இரண்டு மாதங்களில் உள்ளக விசாரணை பொறிமுறை உருவாக்கப்படும் என்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.
இந்தநிலையில் பேரவையின் அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை பிற்போடப்படுமானால் அந்த நேரத்தில் உருவாக்கப்படும் தமது உள்நாட்டு பொறிமுறையையும் பேரவை பரிசீலிக்க முடியும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஸிங்டனில் வைத்து இந்தகருத்தை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு உததியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் சமரவீர அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பதாக இந்த கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த விடயத்தை கையாள்வதற்கு உள்ளக பொறிமுறை ஒன்றை அமைக்கும் வரையில் இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று தமது நாடு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த இரண்டு மாதங்களில் உள்ளக விசாரணை பொறிமுறை உருவாக்கப்படும் என்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
பேரவையின் அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை பிற்போடப்படுமானால் அந்த நேரத்தில் உருவாக்கப்படும் தமது உள்நாட்டு பொறிமுறையையும் பேரவை பரிசீலிக்க முடியும்.
எனவே ஆகஸ்ட் மாதம் வரைக்கும் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை பேரவை வழங்கும் என்று நாம் நம்புகிறோம்.
"முன்னைய அரசாங்கம் போன்று நாம் அனைத்தையும் நிராகரிக்கும் போக்கை கொண்டிருக்கவில்லை. எந்தக் குற்றச்சாட்டும் இடம்பெறவில்லை என்றும் நாங்கள் கூறவில்லை. குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று நம்புகின்றோம். ஆனால் இலங்கை மனித உரிமைகயை மீறியவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்பதனை நாங்கள் உறுதிபடுத்துகின்றோம். எமது பொறிமுறையின் ஊடாக இதனை செய்வோம்.
இதற்காக ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைப்பு ஆகியவற்றிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை இலங்கை எதிர்பார்க்கின்றது என்றார். இதேவேளை மார்ச் 25ஆம் திகதி அறிக்கையை வெளியிட அட்டவணையை தயாரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேச்சாளர் ருபர்ட் கொல்விலி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம்இ மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் கீழ் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் சர்வதேச அறிக்கையே எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் கால் நூற்றாண்டுகாலம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அதிகளவிலான சிவிலியன்கள் கொல்லப்படடிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் தரப்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் வரை பிற்போடுங்கள் : அமெரிக்காவில் அமைச்சர் மங்கள கோரிக்கை
Reviewed by Author
on
June 20, 2015
Rating:

No comments:
Post a Comment