அண்மைய செய்திகள்

recent
-

21 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் சங்கா


21 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களின் வரிசை பட்டியலில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.


மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு  21 ஆம் நூற்றாண்டில் சிறந்த டெஸ்ட் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்க்கரும் இரண்டாவது இடத்தில் இலங்கையணியின் குமார் சங்கக்காராவும் மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கணக்கெடுப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட்  நிறுவனமான cricket.com.au. இனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் முடிவிலேயே இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து 100 சிறந்த டெஸ்ட் வீரர்களை தெரிவு செய்யும் பட்டியலில் 16,000 ரசிகர்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

அவற்றுள் 23 சதவீதமான வாக்குகள் சச்சினுக்கும் 14 சதவீதமான வாக்குகள் சங்காவுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடம்கில்கிறிஸ்டுக்கு 13 வீதமான வாக்குகளும் ரிக்கி பொண்டிங்கிற்கு 11 வீதமான வாக்குகளும் ஜக் கலிஸ்க்கு 11 வீதமான வாக்குகளும் ஏபிடி வில்லியர்ஸ்க்கு 10 வீதமான வாக்குகளும் ஷேன் வோர்னுக்கு 9 வீதமான வாக்குகளும் கிளென் மெக்ராத்துக்கு 5 வீதமான வாக்குகளும் முத்தையா முரளீதரனுக்கு 3 வீதமான வாக்குகளும் டேல் ஸ்டெய்னுக்கு 1 வீதமான வாக்குகளும் கிடைத்து இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் சங்கா Reviewed by Author on June 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.