ஷாகிப்தான் உலகின் சிறந்த சகல துறை வீரர்
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷா கிப் அல் – ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த சகல துறை வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி சகலதுறை வீரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர் தில்ஷானை பின்னுக்கு தள்ளி, 4 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தைப் பிடித்தார் ஷாகிப். இந்தியாவுக்கு எதிரான தொடரில், பங்களாதேஷ் அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ஓட்டங்களை (52,51,20) ஷாகிப் பெற்றார். அதேபோல் இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார். சகலதுறை வீரர் பட்டியலில் ஷாகிப் அல்– ஹசன் 408 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். தில்ஷான் 404 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் 3ஆவது இடத்தையும் பெற்றனர்.
ஷாகிப்தான் உலகின் சிறந்த சகல துறை வீரர்
Reviewed by Author
on
June 28, 2015
Rating:

No comments:
Post a Comment