சச்சினுக்கு குறையாத மவுசு! பொண்டிங், கில்கிறிஸ்டை ஓரங்கட்டிய சங்கக்காரா
அவுஸ்திரேலியாவின் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அந்த இணையதளம் 2000ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டியில் கலக்கிக் கொண்டிருந்த வீரர்கள் 10 பேரின் பட்டியலிட்டு இதில் யார் சிறந்த வீரர் என்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் சச்சின் டெண்டுல்கர் 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவரது மவுசு சற்றும் குறையவில்லை.
இவரைத் தொடர்ந்து சங்கக்காரா (14%) இரண்டவது இடம் பிடித்தார். கில்கிறிஸ்ட் (13%), பொண்டிங் (11%), காலிஸ் (11%), ஷேன் வார்ன் (10%), டிவில்லியர்ஸ் (10%), மெக்ராத் (5%), முரளிதரன் (3%), டேல் ஸ்டெய்ன் (1%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
சச்சினுக்கு குறையாத மவுசு! பொண்டிங், கில்கிறிஸ்டை ஓரங்கட்டிய சங்கக்காரா
Reviewed by Author
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment