மன்னாரில் காற்றாலைக்கு ஆதரவாக போராட உணவு,பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்திற்கு எதிராக தொடர்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மாவட்டம் முழுவதையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு காற்றாலைக்கு எதிராக போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
இவ்வாறான பின்னனியில் இன்றையதினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மன்னார் மாவட்டத்தை சாராத சில இளைஞர்கள் உள்ளடங்களாக ஒரு குழு ஒன்றிணைந்து காற்றாலை மன்னார் மாவட்டத்தில் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் போராட்டத்தை தொடர்ந்து காற்றாலை தொடர்பில் மகஜர் ஒன்றையும் மாவட்ட செயலகத்தில் கையளிக்கிருந்தனர்
இந்த பின்னனியில் குறித்த போராட்டகாரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அந்த குழுவிடம் கேள்வி எழுப்பிய நிலையில் சிலர் தப்பி சென்றனர்
ஒரு சில இளைஞர்கள் தடுக்கப்பட்டு அவர்களிடன் போராட்டம் தொடர்பில் வினவப்பட்ட நிலையில்
கூட்டம் ஒன்று என்று கூறி தங்களை மல்லாவியில் இருந்து அழைத்து வந்ததாகவும் பணம்,உணவு மற்றும் ஏனைய செலவுகளை தாங்கள் பார்த்து கொள்வதாக தெரிவித்து அழைத்து வந்து போராட்டத்தில் இறக்கி விட்டுவிட்டு தங்களை விட்டு விட்டு தங்களை அழைத்து வந்தவர் ஓடி சொன்று விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட காற்றாலை நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவதாகவும் தாங்களாகவே கிராமங்களில் உள்ள இளைஞர்கழகங்களிடம் உதவி செய்வதாக கோரி கோரிக்கை கடிதங்களை பெற்று அவற்றை காற்றாலைக்கு ஆதரவு கடிதங்களை போல் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் உள்ளூர் இளைஞர்கழகங்கள் தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment