முதல் டெஸ்ட் போட்டி: சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 300 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் சில்வா 125 ஓட்டங்களும், சங்கக்காரா 50 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், உல்பிகர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதில் ஆசாத் ஷாபிக் 14 ஓட்டங்களுடனும், சர்பிராஷ் அஹ்மத் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில் சர்பிராஷ் மற்றும் ஆசாத் ஷாபிக் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
சிறப்பாக விளையாடிய சர்பிராஷ் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுமுனையில் விளையாடி ஆசாத் ஷாபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 131 ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 417 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 4, பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 2வது இன்னிங்சில் 206 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கருணரத்ன (79), திரிமன்னே (44) மட்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் தரப்பில், யாசிர் ஷா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டி: சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
Reviewed by Author
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment