அண்மைய செய்திகள்

recent
-

புலம்பெயர்வாளர் விழாவுக்கு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு!- பிரதி வெளியுறவு அமைச்சர்


இலங்கையில் நடைபெறவுள்ள புலம்பெயர்வாளர் விழாவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் திறந்தநிலை அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இந்த விழாவுக்கான தனிப்பட்ட அழைப்புக்கள் நிகழ்வு நடைபெறும் தினத்துக்;கு அண்மித்த தினங்களில் விடுக்கப்படும் என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தமிழ் புலம்பெயர்வாளர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கையர்களுக்குமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கே இந்த பதிலை அவர் வழங்கியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன தமக்குள் விடுதலைப் புலிகள் தொடர்பில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.

எனவே நாட்டுக்கு ஊறு நேராத வகையில் அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போர் காரணமாக இலங்கையில் இருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்தனர். எனவே அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்வாளர் விழாவுக்கு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு!- பிரதி வெளியுறவு அமைச்சர் Reviewed by Author on June 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.