வங்கதேசத்தில் பரிசாக கிடைத்த மோட்டர் சைக்கிளை விற்ற ஷிகர் தவான்
இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான், வங்கதேசத்தில் தனக்கு பரிசாக கிடைத்த விலை உயர்ந்த மோட்டர் சைக்கிளை விற்றுவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 75 ஓட்டங்கள் அடித்ததற்காக ஷிகர் தவானுக்கு விலை உயர்ந்த மோட்டர் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
ஆனால் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டாம் என்றும், அதற்கு இணையான ரொக்கப்பரிசு வேண்டும் எனவும் ஷிகர் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையை கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தெரிவுக்குழு தலைவர் ஃபாருக் அகமது கூறுகையில், மோட்டார் சைக்கிளுக்கு இணையான ரொக்கப்பரிசை ஷிகர் தவான் கேட்டுக் கொண்டதால், அவர் இந்தியா சென்றதும் அதற்கான தொகை அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பரிசாக கிடைத்த மோட்டர் சைக்கிளை விற்ற ஷிகர் தவான்
Reviewed by Author
on
June 28, 2015
Rating:

No comments:
Post a Comment