அண்மைய செய்திகள்

recent
-

பேஸ்புக்கில் இழிவு படுத்தியதால் பல்கலைக்கழக மாணவி தற்கொலை..சில‬ ஆண்களுக்கு‬ ‪‎இது‬ சமர்ப்பனம்‬.

கிளிநொச்சி பளையில் கரந்தாய் எனும் இடத்தில் 24.06.2015 நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவியான பானுசா சிவப்பிரகாசு என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணத்தை பொலிசார் கண்டு பிடித்துள்ளனர் என்பதை அறிந்தேன், மேற்படி பெண்ணின் பெயர் மற்றும் அவரது கைத்தொலைபேசி இலக்கம் என்பனவற்றை பேஸ்புக்கில் இளைஞன் ஒருவன் பதிவேற்றி இழிவு படுத்தியதாகவும் அதனை தட்டி கேட்க இளைஞன் வீட்டிற்கு சென்ற பெண்ணின் தந்தையை இளைஞனின் தந்தை விரட்டியதாகவும் இவ்வாறான சம்பவங்களால் மனமுடைந்த மாணவி தூக்கு மாட்டி உயிரை மாய்த்துள்ளார்.
* பேஸ்புக்கில் பதிவேற்றம் என்பது சிறந்த ஒன்றாக இருத்தலே அவசியம். தவறான முறையில் பதிவேற்றம் செய்து இழிவு படுத்தியாதால் தற்கொலைக்கு காரணமாக இருந்த அந்த இளைஞனுக்கு சட்டமும் தன் கடமையை செய்யுமா?
* தவறான முறையில் பேஸ்புக்கை பயன்படுத்தும் நபர்களை பொலிசார் கைது செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
* தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பமோ வாழ் நாள் பூராக துன்பக் கடலில் மிதக்க தற்கொலையின் காரண கர்த்தா சந்தோசமாக திரிவான் இவ்வாறான முறையில் பெண்களின் தற்கொலைகளுக்கு காரணமாக விளங்குபவ நடு வீதியில் வைத்து கொல்லுதலே சிறந்த தீர்ப்பு.
பெண்களுடன் நட்பு என்ற ரீதியில் அறிமுகம் ஆகும் ஆண்கள் பின்னர் சாமார்த்தியமாக போன் நம்பரை வாங்குவதும் அதன் தொடர்ச்சியாக காதலிக்க சொல்லி அடம் பிடிப்பதும் அல்லது தமது காமக் களியாட்டங்களுக்கு வற்புறுத்துவதும் அவளோ அவற்றிற்கு மறுப்பு தெரிவிக்க அவளது பெயரில் போலி பேஸ்புக்கை திறந்து அதில் அவளது போன் நம்பர் மற்றும் படங்களை பதிவேற்றி இழிவு படுத்துகின்றனர். இதற்கு பெண்களும் காரணமாக இருப்பதே மனம் வருந்தக் கூடிய ஒன்றாகும்.
எனவே என் அன்பான சகோதரிகளே!
தயவு செய்து உங்கள் பேஸ்புக்கில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத அல்லது தெரியாத ஆண்களிடம் தொடர்பை ஏற்படுத்தாதீர்கள். எத்தனையோ கனவுடன் இருக்கும் உங்கள் குடும்பங்களின் கனவை சிதைக்காதீர்கள். பேஸ்புக்கில் எத்தனையோ ஆண்கள் திட்டமிட்ட முறையில் பெண்களிடம் பழகி அவர்களின் கற்பை சூறையாடி அதன் பின்னர் அவர்களை அநாதரவான நிலையில் விடுவதுக்காக எத்தனிப்பதுடன் அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கே கொண்டு செல்கின்றனர்.
ஆகையினால்

‪#‎எப்போதும்‬ ‪#‎பேஸ்புக்கில்‬ ‪#‎கவனமாக‬ ‪#‎இருங்கள்‬ ‪#‎விழிப்புடன்‬ #இருங்கள் ‪#‎சகோதரிகளே‬.

கு.தினேஸ்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
இறுதி ஆண்டு மாணவன்.


ளையில் பல்கலைக் கழக மாணவி தூக்கு மாட்டி தற்கொலை – முகப்புத்தகம் காரணம்

கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் இன்று காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் அறிந்து மாணவியின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அந்த யுவதி மூன்று நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் இவர் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததில் ஒரு கண்ணில் காயப்பட்டு அங்கிருந்து உயிர் தப்பி சற்றும் தளராமல் தனது கல்வியை தொடர்ந்தார் எனவும் இன்று இப்படி அநியாயமாக தனது உயிரை துறந்து விட்டார் எனவும் குடும்பத்தினர் பதறுகின்றனர்.
பல்கலை கழகத்தில் பயிலும் மாணவர்கள் இவ்வாறான முடிவுகளை அவசரமாக எடுப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இவர்கள் கற்ற கல்வி தன்னம்பிக்கையையும், தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எதிர்க்கும் மனோபலத்தையும் வழங்காதது கவலைக்குரியது. இவர்களின் முட்டாள்தனமான செயல்களால் மனமுடைந்து வருந்துவது குடும்பத்தினரே. அத்தோடு இளைஞர்கள் தொழில் நுட்பத்தை தவறான செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் அண்மைகாலமாக முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


பேஸ்புக்கில் இழிவு படுத்தியதால் பல்கலைக்கழக மாணவி தற்கொலை..சில‬ ஆண்களுக்கு‬ ‪‎இது‬ சமர்ப்பனம்‬. Reviewed by NEWMANNAR on June 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.