அண்மைய செய்திகள்

recent
-

பிரஜா உரமைச்சான்றிதழ் பெறுவற்கான நடமாடும் சேவை

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு வரும் வெள்ளிக்கிழமை (26-06-2015) அன்று கிளிநொச்சி டிப்போ சந்தியிலமைந்துள்ள கூட்டுறவு மண்டப கட்டிட மண்டபத்தில் பிரஜா உரிமைச்சான்றிதழுக்கான நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பங்கு பெறும் பயனாளினட்காக வரும் வெள்ளிக்கிழமை இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. எனவே பிரஜா உரிமை தேவைப்படும் அனைத்து மக்களும் முற்றிலும் இலவசமாக  நடாத்தப்படும் இச்சேவையில் கலந்து கொண்டு  பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரஜா உரிமை என்பது இலங்கைப் பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்த பிள்ளைகட்கு இலங்கை குடிமகன் என்ற அந்தஸ்தை பெறுவதற்கான உரிமையாகும். இச்சான்றிதழ் இன்றி இலங்கை குடிமகன்கட்கான எந்தவித சேவைகளையோ அல்லது சலுகைகளையோ பெற முடியாது.

ஏனைய தகவல்கட்கு எமது சட்ட உதவி ஆணைக்குழு அலுவலகத்தையோ அல்லது 023-2222045  என்ற எமது அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0711195583 என்ற திட்டஅலுவரின் இலக்கத்திற்கோ அழையுங்கள்.


தகவல்
திட்ட அலுவலர்இ
சட்ட உதவி ஆணைக்குழு
பிரஜா உரமைச்சான்றிதழ் பெறுவற்கான நடமாடும் சேவை Reviewed by NEWMANNAR on June 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.