அண்மைய செய்திகள்

recent
-

வயலுக்குள் இருந்து சடலம் மீட்பு ; எள்ளுக்காட்டு சிறுமியினதா என சந்தேகம்


குஞ்சுப் பரந்தன் ,பொறிக்கடை பகுதியில் நெல்வயலுக்கு நடுவே பெண் குழந்தை ஒன்றின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது.



கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்னர் காலத்திற்கு முன்னர் காணாமல் போன 3வயது பெண் குழந்தையின் சடலமாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கடந்த மாதம் 21 ஆம் திகதி கிளிநொச்சி எள்ளுக்காட்டுப்பகுதியில் தயார் குளிக்கச் சென்ற வேளை வீட்டில் தனிமையில் இருந்த சந்திரகுமார் ஜெருசா (வயது 03) என்ற பெண் குழந்தை காணாமல் போனார்.



குழந்தையைக் காணவில்லை என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குழந்தையின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டது. 14 வயது சிறுவன் உட்பட குழந்தையின் உறவினர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணையினை மேற்கொண்டனர்.



எனினும் குழந்தையை கண்டறிய முடியவில்லை. காடுகள், குளங்கள் , கிணறுகள் என்பன பொலிஸாரும் , கடற்படையினரும் பொதுமக்களும் சேர்ந்து தேடுதல் நடத்தினர். எனினும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.



இந்த நிலையில் பொலிஸார் குழந்தையின் தாயின் மீதே சந்தேகப்பட்டனர். அத்துடன் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி தாண்டிய அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறுமியின் புகைப்படம் வழங்கப்பட்டுள்ளது.



அத்துடன் விமான நிலையத்தில் இருந்து கடத்தப்படாது இருக்க விமான நிலையத்திலும் சிறுமியின் புகைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் தனது குழந்தையை காட்டேறிதான் கடத்தியுள்ளதாகவும் தன்னையும் ஒரு முறை சிறியவயதில் காட்டேறி கடத்தியதாகவும் பின்னர் ஓரிரு மாதங்களில் விடுவிக்கும் என்றும் தாயார் பொலிஸாருக்கு தெரிவித்ததுடன் அதற்கான பூஜைகளும் இடம்பெற்றன.



நேற்று வயலுக்குள் இருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலுக்கு மருந்து அடிக்கச் சென்றவர் ஒருவர் குறித்த சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணையினை ஆரம்பித்தனர்.



எனினும் சடலம் எவ்வாறு வந்தது என்றும் சாவுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. குறித்த சடலம் 3 வயது சிறுமியினுடையதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=611174156320218221#sthash.oyEaRMRZ.dpuf
வயலுக்குள் இருந்து சடலம் மீட்பு ; எள்ளுக்காட்டு சிறுமியினதா என சந்தேகம் Reviewed by NEWMANNAR on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.