மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ்,எஸ்.ரி.எப் 1208 பேர் குவிப்பு.Photos
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 73வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள 73 வாக்களிப்பு நிலையங்களுக்கு இவ்வாறு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் அரச பேரூந்துகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 79 ஆயிரத்து 433 பேர் தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
-இவர்களில் 2 ஆயிரத்து 654 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.8 ஆயிரத்து 781 வாக்களர்கள் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் நலனை கருத்தில் கொண்டு புத்தளத்தில் 17 வாக்களிப்பு நிலையங்களும்,அனுராதபுரத்தில் 2 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகம்,மன்னார் மாவட்டத்தில் தேர்தல் மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் என 1208 பேரூம்,தேர்தல் கடமைகளுக்காக அரச அலுவலகர்களாக 1237 பேரூம் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ்,எஸ்.ரி.எப் 1208 பேர்
குவிப்பு.Photos
Reviewed by Admin
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment