மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்...
இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் காணமல்போன எம்.எச்.370 மலேசிய விமானத்தினுடையது என மலேசியப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பயணிகளுடன் மலேசிய விமானம் புறப்பட்டுச் சென்று 2 மணி நேரத்தில் திடீரென மாயமானது.
அதனைத் தேடும் பணியில் சர்வதேச நாடுகள் தீவிரமாக ஈடுபட்டன. இருப்பினும் விமானத்தின் எந்த ஒரு பாகமும் கிடைக்கவில்லை.
விமானத்திற்கு என்ன நடந்தது. அதில் பயணித்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் புரியாதபுதிராகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) சில தினங்களுக்கு முன்பு ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது.
இது மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் 2 மீற்றர் நீளமும் ஒரு மீற்றர் அகலமும் உடையது.
விமானத்தின் பாகங்கள் பிரான்ஸ் நாட்லுள்ள தொவ்லொசுவிலுள்ள பாதுகாப்பு துறையின் ஆய்வகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அந்தப் பாகங்களை ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் அவை எம்.எச் .370 யினுடையது என இறுதியாக உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் காணமல்போன மலேசிய விமானத்தினுடையது என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்...
Reviewed by Author
on
August 07, 2015
Rating:
Reviewed by Author
on
August 07, 2015
Rating:





No comments:
Post a Comment