தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 961 முறைப்பாடுகள்!- கபே
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 961 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிகளை மீறுதல் தொடர்பில் 887 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 74 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொழும்பு, பதுளை, அனுராதபுரம், கம்பஹா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான தேர்தல் விதி மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பொதுச் சொத்து பயன்பாடு, அரச ஊழியர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தல், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரக் காரியாலங்களை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 961 முறைப்பாடுகள்!- கபே
Reviewed by NEWMANNAR
on
August 05, 2015
Rating:

No comments:
Post a Comment