8 மாத காலப்பகுதிக்குள் 425 விபத்துக்கள் : 46 மரணங்கள்...
2015 ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையான கடந்த 8 மாதக் காலப்பகுதிக்குள் மாத்தளை மாவட்டத்தின் பத்து பொலிஸ் பிரிவுகளில் மாத்திரம் 425 வாகன விபத்துக்களும் 46 மரணங்களும் சம்பவத்துள்ளதாக மாத்தளை மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டை விட 2015 இன் 8 மாதக் காலப்பகுதிக்குள் இவ்வாறு அதிகரித்த விபத்துக்களும் மரணங்களும் சம்பவத்திருப்பதாக மேற்படி மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் எச்.எம்.ஆர்.பி.ஜெயவர்தன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
2014 ஆம் ஆண்டு இப் பிரதேசங்களில் 522 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 26 மனித உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதேபோன்று இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் 425 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 46 மனித உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளமை கண்டறிப்பட்டுள்ளது என்றார்.
8 மாத காலப்பகுதிக்குள் 425 விபத்துக்கள் : 46 மரணங்கள்...
Reviewed by Author
on
September 23, 2015
Rating:
Reviewed by Author
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment