உலகளவில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்...
சர்வதேச அளவில் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்களின் சராசரி ஊதியப்பட்டியலில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.டி மேலாளர்கள் அதிக ஊதியம் பெற்று வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பணியாளர்களை தெரிவு செய்யும் MyHiringClub.com என்ற இணையதளம் 2015ம் ஆண்டுக்கான ஐ.டி நிறுவன மேலாளர்களின் சராசரி ஆண்டு வருமான பட்டியலை ஆய்வு செய்து அண்மையில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஊதியத்தை 40 நாடுகளில் உள்ள 9.413 ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டில் பணிபுரியும் ஐ.டி மேலாளர்களே அதிக அளவில் ஊதியம் பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
சுவிஸ் ஐ.டி மேலாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,71,465 டொலர்கள் ஊதியமாக பெற்று வருகின்றனர்.
இதற்கு அடுத்த இடத்தில், பெல்ஜியம் நாட்டு ஐ.டி மேலாளர்கள் 1,52,430 டொலர்களும், டென்மார்க் நாட்டு ஐ.டி மேலாளர்கள் 1,38,920 டொலர்களும் ஈட்டுகின்றனர்.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் அமெரிக்கா 1,32,877 டொலர்களும், பிரித்தானியா 1,29,324 டொலர்களும் ஊதியமாக பெறுகின்றனர்.
பிரித்தானியாவை தொடர்ந்து அர்ஜெண்டினா 51,380 டொலர்கள், செக் குடியரசு 43,219 டொலர்கள், சீனா 42,689 டொலர்கள், இந்தியா 41,213 டொலர்கள், பிலிப்பைன்ஸ் 37,534 டொலர்கள், இந்தோனேஷியா 34,780 டொலர்கள், தாய்லாந்து 34,423 டொலர்கள் வியட்நாம் 30,938 டொலர்கள் மற்றும் பல்கேரியா 25,680 டொலர்கள் ஈட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசிய ஆய்வு நிறுவனத்தின் தலைமை மேலாளரான ராஜேஷ்குமார், சர்வதேச அளவில் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளின் அவுட்சோர்சிங் வர்த்தகங்கள் உலகளவில் ஊதியத்தை நிர்ணயம் செய்வதால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகளவில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்...
Reviewed by Author
on
September 21, 2015
Rating:
Reviewed by Author
on
September 21, 2015
Rating:


No comments:
Post a Comment