இவானோவிச்சிற்கு திருமணம்....
செர்பிய டென்னிஸ் வீராங்கனை இவானோவிச் வரும் டிசம்பரில் ஜேர்மன் கால்பந்து வீரர் ஸ்கீவன்ஸ்டீகரை மணப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது
இவானோவிச், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ, அவுஸ்திரேலிய கோல்ப் வீரர் ஆடம் ஸ்கட்டுக்குப் பின், கடந்த 2014இல் இருந்து nஜர்மனி கால்பந்து வீரர் ஸ்கீவன்ஸ்டீகரை காதலித்து வருகிறார்.
கடந்த ஜ{லை மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளி யாகின.
லண்டன் விம்பிள்டன் தொடரின் போது இவானோவிச் கைவிரலில் மோதிரம் காணப் பட்டது.
இதற்கேற்ப சமீபத்திய அமெரிக்க ஓபன் தொடரின் போது ஸ்கீவன்ஸ்டீகரும் இவானோவிச் பங்கேற்ற போட்டிகளை நேரில் பார்த்து ஆதரவு கொடுத்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள விருப்பதாக கூறப்படுகிறது.
திருமணத்தை விருந்து நிகழ்ச்சிகளுடன் மிகச்சிறப்பான முறையில் நடத்த திட்ட மிட்டுள்ள ஸ்கீவன்ஸ்டீகர், இதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவானோவிச்சிற்கு திருமணம்....
Reviewed by Author
on
September 23, 2015
Rating:
Reviewed by Author
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment