மூளை, மண்டையோட்டின் பெரும் பகுதியின்றி பிறந்த அதிசய குழந்தை: முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடியது...
மூளை மற்றும் மண்டையோட்டின் பெருமளவான பகுதிகள் இன்றிப் பிறந்த குழந்தையொன்று அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்து தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தவாரெஸ் நகரைச் சேர்ந்த பிரிட்டனி (27 வயது) மற்றும் பிராண்ட்ஸன் (30 வயது) ஆகியோரின் குழந்தையான ஜக்ஸனே இவ்வாறு விநோதமான தோற்றத்துடன் பிறந்து தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான்.
ஜக்ஸன் தனது தாயின் கர்ப்பத்திலிருந்த போது அவனது மூளை மிக மோசமான முறையில் குறை விருத்தியடைந்திருந்ததால் அவன் உயிருடன் பிறப்பதற்கே வாய்ப்பில்லை என மருத்துவர்களால் எதிர்வுகூறப்பட்டிருந்தது.
இதன் போது கருவைக் கலைக்க மருத்துவர்களால் வழங்கப்பட்ட யோசனையை பிரிட்டனியும் பிராண்ட்ஸனும் ஏற்கவில்லை.
இந்நிலையில் மருத்துவர்க ளின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் ஜக்ஸன் உயிருடன் பிறந்தது மட்டுமல்லாது தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான்.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் இத்தகைய குறை பாட்டுடன் 4,859 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை பிறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் அநேகமான குழந்தைகள் பிறந்தவுடனேயே உயிரிழந்து விடுவது வழமை யாகவுள்ளது.
மூளை, மண்டையோட்டின் பெரும் பகுதியின்றி பிறந்த அதிசய குழந்தை: முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடியது...
Reviewed by Author
on
September 28, 2015
Rating:
Reviewed by Author
on
September 28, 2015
Rating:


No comments:
Post a Comment