புதிய அரசின் வரவு செலவுத்திட்டம் நவம்பர் 20ஆம் திகதி
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம், கவர்ச்சிகரமான நிவாரணங்களுடன் மக்களுக்கு சார்பான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது சகல தரப்பினரின் யோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த 100 நாள் அரசாங்கம், இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்ததுடன் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசின் வரவு செலவுத்திட்டம் நவம்பர் 20ஆம் திகதி
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:


No comments:
Post a Comment