உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கேக்...
செல்வந்த அரேபிய குடும்பமொன்றுக்காக 4,000க்கு மேற்பட்ட வைரங் கள் பதிக்கப்பட்ட 50 மில்லியன் ஸ்ரே லிங் பவுண் பெறுமதியான உலகின் விலையுயர்ந்த கேக்கை பிரித்தானிய பிரபல நவநாகரிக வடிவமைப்பாளரான டெபி வின் ஹாம் வடிவமைத்துள்ளார்.
அவர் இதற்கு முன் கறுப்பு மற்றும் சிவப்பு வைரங்கள் பதிக்கப்பட்ட 11.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதி யான உலகின் விலையுயர்ந்த ஆடை யை வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள தனது செல்வந்த வாடிக்கையாளர் குடும்பமொன்றின் வேண்டுகோளின் பேரில் அவர்களது பிறந்தநாள் வைபவத்திற்காக இந்த 6 அடி நீளமான விலையுயர்ந்த கேக்கை வடிவமைத்துள்ளார்.
மேற்படி கேக்கின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்க 1,100 மணி த்தியா லத்துக்கு அதிகமான நேரம் செலவிடப் பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கேக்...
Reviewed by Author
on
September 10, 2015
Rating:

No comments:
Post a Comment