அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியை காணவில்லை-Photos



மன்னார் உயிலங்குளம் கிராமதத்தில் உள்ள தண்ணீர் ரேங் மாதோட்டம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த கலைவானி (வயது-20) எனும் யுவதி காணாமல் போய் 11 நாட்களாகியும் இது வரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என காணாமல் போன யுவதியின் தாய் ஜெயக்குமார் புஸ்பரானி தெரிவித்துள்ளார்.


தனது மகள் காணாமல் போனமை குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் உயிலங்குளம் கிராமதத்தில் உள்ள தண்ணீர் ரேங் மாதோட்டம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த ஜெயக்குமார் புஸ்பராணி ஆகிய எனது மூன்றாவது மகளான கலைவானி (வயது-20) என்பவர் மன்னாரில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடமையாற்றி வந்தார்.

இவர் கடந்த 17 ஆம் திகதி வியாழக்கிழமை (17-09-2015) வேலைக்குச் செல்வதாக கூறி காலை 7.45 மணியளவில் உயிலங்குளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பேரூந்து மூலம் மன்னாருக்குச் சென்றார்.பின் மாலையாகியும் வீடு திரும்பவில்லை.

இரவு வரை எதிர்பார்த்தோம் ஆனால் வீடு திரும்பவில்லை.இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தோம்.

ஆனால் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் எனது மகள் தொடர்பில் இது வரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

எனது மகள் காணாமல் போன தினத்தின் மறுநாள் எனது மகளது தொலைபேசி இலக்கத்தில் கதைத்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மகள் காணாமல் போய் இன்றுடன் 11 நாட்களாகின்றது.மன்னார் பொலிஸார் அவர் தொடர்பில் எதுவித தகவல்களையும் இது வரை வழங்கவில்லை என காணாமல் போன யுவதியின் தாய் மேலும் தெரிவித்தார்.

மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியை காணவில்லை-Photos Reviewed by NEWMANNAR on September 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.