பெர்முடா முக்கோணத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள்...
வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் தான் பெர்முடா முக்கோணம் இருக்கின்றது. இதை சாத்தானின் முக்கோணம் என்றும் அமெரிக்க மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு காரணம், பெர்முடா முக்கோணத்தின் மேல் கடந்த விமானங்களும், அருகே சென்ற கப்பல்களும், படகுகளும் என்ன ஆனது என்றே தெரியாத அளவில் அழிந்துப் போயிருக்கின்றன.
அறிவியலில் உச்சத்தை அடைந்துவிட்டோம், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான கூறுகளை கண்டறிந்துள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அறிஞர்கள் கூட பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் இந்த வினோத செயல்களை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.
அப்படி என்ன தான் நடக்கிறது என்று ஆராய்ச்சி கூட செய்ய இயலாத அளவு மிகவும் ஆபத்தானப் பகுதி என்று தடைவிதிக்கப்பட்டு திகழ்கிறது பெர்முடா முக்கோணம். அங்கு நடக்கும் அதிர்ச்சியான தகவல்கள் பற்றி இனிப் பார்க்கலாம்…
திசைக் குழப்பம்
கப்பல் மற்றும் விமானங்கள் காந்த திசைக் காட்டியின் படிதான் பயணிக்கின்றன. ஆனால், பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது காந்த திசைக் காட்டிகள் செயலிழந்துப் போவதாகக் கூறப்படுகிறது. இதுவே, பல விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக கருதுகிறார்கள்.
கொலம்பஸ்பெமுடா முக்கோணத்தின் அருகே திசைக் காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாக கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். மற்றும் அப்பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தை கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
போர் விமானங்கள் மறைந்து போயின…
1945 ஆம் ஆண்டு குண்டுகள் தாங்கிய அமெரிக்க போர் விமானங்கள், தாக்குதலுக்காக ஃபோர்ட் லாடர்டல் எனும் பகுதியில் இருந்து பயணத்தை துவக்கி இருக்கின்றனர். கடைசியாக அவர்களிடம் இருந்து திசைக் காட்டி வேலை செய்யவில்லை என்ற தகவல் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் மீட்க சென்ற விமானங்களும் மறைந்து போய்விட்டன. இதனால், அமெரிக்கா போரில் பெரும் தோல்வி அடைந்தது.
ஆயிரம் உயிர்கள்…
கடந்த நூற்றாண்டில் மட்டும் பெர்முடா முக்கோணம் ஆயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும்…
ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு விமானங்களும், ஏறத்தாழ 20 பந்தைய படகுகளும் பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போகின்றன.
மர்மம் இதுவரை பெர்முடா முக்கோணம் பகுதியில் காணமால் போன எந்த ஒரு விமானமோ, படகோ, கப்பல்களோ இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
புரளி
இது ஏலியன்களின் செயல் என்று கடந்த நூற்றாண்டில் பரவலாக புரளி பேசப்பட்டிருக்கின்றது. அட்லாண்டிஸ் நகரம் அட்லாண்டிஸ் நகரம் கடலினுள் அழிந்து போனதற்கு பெர்முடா முக்கோணமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
வியப்பு
பெர்முடா முக்கோணம் வெளியில் இருந்து பார்க்கும் போது மிகவும் அமைதியான இடமாக தான் காட்சி அளிக்கின்றது. ஆயினும் அதன் அருகில் சென்றால் அனைத்து பொருள்களும் மாயமாகிவிடுவது தான் வியப்பாக இருக்கின்றது.
பரப்பளவு
பெர்முடா முக்கோணத்தின் பரப்பளவு 4,40,000 மைல் ஆகும். நமது நாட்டோடு ஒப்பிடுகையில் ராஜஸ்தான், மகாராஸ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒன்றிணைத்தால் கூட, அதனை விட பெரியதாக இருக்கும் பெர்முடா முக்கோணம்.
பெர்முடா முக்கோணத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள்...
Reviewed by Author
on
October 23, 2015
Rating:

No comments:
Post a Comment