வடக்கு மக்கள் ஆயுத யுத்தத்தினால் சாதிக்க முடியாததை அறிவினால் சாதிக்கின்றார்கள்: எம்.ரி.ஏ.நிஸாம்
வடக்கு மக்கள் ஆயுத யுத்தத்தினால் சாதிக்க முடியாததை அறிவு யுத்தத்தினால் தற்பெழுது சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடக்கு தமிழர்கள் அழிந்து விட்டார்கள் என உலகம் நினைத்தது. ஆனால் இன்று உலகத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்ற அதாவது ஆயுத யுத்தத்தினால் சாதிக்க முடியாததை அறிவு யுத்தத்தினால் அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எங்கு தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களோ, அறிவு என்ற ஒன்றை மட்டும் எடுத்து உலக முழுவதும் வியாபித்தார்கள்.
இன்று அறிவுடன் கூடிய தந்திரோபாயங்களுடன் கூரிய ஆயுத யுத்தத்தைவிட, கூரிய அறிவுடன் கூடிய யுத்தமாக செய்யக்கூடிய சிந்தனைகளோடும், செயற்பாடுகளோடும் மீண்டும் திரும்பி வந்திருக்கின்றார்கள் என தெரிவித்தார்.
வடக்கு மக்கள் ஆயுத யுத்தத்தினால் சாதிக்க முடியாததை அறிவினால் சாதிக்கின்றார்கள்: எம்.ரி.ஏ.நிஸாம்
Reviewed by NEWMANNAR
on
November 05, 2015
Rating:

No comments:
Post a Comment