அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய் கிரகத்தில் புதைந்திருக்கும் மர்மங்கள்...


சிவப்பு கிரகம் என அறியப்படும் செவ்வாய் கிரகத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சூரியனில் இருந்து உருவான சோலார் புயலால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் பெருக்கெடுத்ததன் அடையாளங்கள் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்தே இந்த தகவலை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

செவ்வாய் கிரகம் குறித்து இதுவரை வெளியான தகவல்கள் அனைத்தையும் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

பூமியை ஒத்திருந்தது செவ்வாய் கிரகம்


சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை போலவே செவ்வாய் கிரகத்திலும் ஆறுகள், அருவிகள் என அனைத்தும் இருந்துள்ளதாம். சோலார் புயல் வந்து தாக்கும் முன்பு செவ்வாய் வளிமண்டலமும் இயக்க நிலையில் இருந்த காலகட்டத்தில் தான் அது பூமியை ஒத்திருந்தனவாம்.

பூமியை போன்று செவ்வாய் கிரகத்தில் அதன் வளிமண்டலத்தை பாதுகாக்க காந்தபுலம் எதுவும் பரவலாக இல்லை. இதனால் அங்கு புறஊதா கதிர்களின் கதிர்வீச்சும் வாயுக்களின் உயர் ஆற்றல் கொண்ட மோதல்களும் இடைவிடாது நடக்குமாம்.



செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்


செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் சிதைந்துள்ள போதிலும் சில சிறப்பு நிலைகளில் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் பதிவு செய்த புகைப்படங்களை ஆராய்ந்தவர்கள் செவ்வாய் கிரகத்தில் ஆழமான நீரோடை இருந்துள்ளது என அடையாளம் கண்டுள்ளனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் வெப்பநிலை -23C தொடங்கி -87C வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



சிவப்பு கிரகத்தில் மனிதர்கள் செல்லும் வாய்ப்பு


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA வரும் 2020-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்பும் பொருட்டு முயற்சியை தற்போதே துவங்கியுள்ளது.

6 விண்வெளி வீரர்கள் இதற்கெனவே சிறப்பு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை நீளும் என கூறப்படுகிறது.



செவ்வாய் கிரகத்தில் தெரியும் உருவங்கள்


சிவப்பு கிரகத்தில் தெரியும் உருவங்கள் அனைத்துமே மாயை என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டதாக வெளியான புகைப்படங்களில் இருக்கும் தோற்றங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் கண்டு உணர்ந்த பொருட்கள் என்றும் உளவியல் ரீதியாக அது நமக்கு புதிய தோற்றத்தை காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் கிரத்தில் உயிர்

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருக்கும் என்றால் அது அந்த கிரகத்தின் மேற்பரப்பின் அடியில் இருப்பதாகவே அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெள்ளத்தின் காரணமாக உருவான மாபெரும் பனித் தொகுப்பு உறைந்து காணப்படுகிறதாம்.

இந்த பனித் தொகுப்புகள் எரிமலைக் குழம்புகளால் சூடாக்கப்படுவதால் தான் செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருப்பது போன்று தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



செவ்வாய் கிரகத்தில் புதைந்திருக்கும் மர்மங்கள்... Reviewed by Author on November 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.