துடுப்பாட்ட செய்தி மெல்போர்ன் மைதானத்தில் திரண்ட 80 ஆயிரம் ரசிகர்கள்: பிக் பாஷ் போட்டியை பார்ப்பதில் சாதனை
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பிக் பாஷ் போட்டியை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை படைத்தனர்.
அவுஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த், மெல்போர்ன் போன்ற உலக பிரபலம் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன.
எனினும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் தொடங்கும் ‘பாக்சிங் டே’ கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மெல்போர்னில்தான் நடத்தப்படும்.
இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ்- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் 161 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் கேமரூன் ஒயிட் 54 ஓட்டங்களும் ஆரோன் பிஞ்ச் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் லூக் ரைட் சதம் அடிக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
லூக் ரைட் 63 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 109 ஓட்டங்கள் குவித்தார்.
உள்ளூர் அணிகள் மோதிய இந்த போட்டியை காண 80883 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.
இதன்மூலம் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும் உள்ளூர் போட்டிக்கு காண அதிக ரசிகர்கள் வருகை தந்த போட்டியாக இது சாதனைப் படைத்துள்ளது.
துடுப்பாட்ட செய்தி மெல்போர்ன் மைதானத்தில் திரண்ட 80 ஆயிரம் ரசிகர்கள்: பிக் பாஷ் போட்டியை பார்ப்பதில் சாதனை
Reviewed by Author
on
January 03, 2016
Rating:
Reviewed by Author
on
January 03, 2016
Rating:




No comments:
Post a Comment