அண்மைய செய்திகள்

recent
-

கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு.....


2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/home.jsf  இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில் மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய முடிவுகளின் திருப்பியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம்  5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு..... Reviewed by Author on January 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.