இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜெயலலிதா மோடியிடம் கோரிக்கை...
இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 80 பேரையும் விடுவிக்க தலையிடவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் ஒருமுறை இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுவருடக் காலப்பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமையானது மிகவும் துரதிஸ்டவசமானது.
அவர்கள் புதுவருடத்தில் கூட தமது குடும்பத்தினருடன் இருக்க முடியாத சந்தர்ப்பத்தை இந்த கைது சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுதல் மற்றும் அவர்கள் கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் தமிழக மீனவர்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்காக தமிழகம், மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள 1520 கோடி ரூபாய்கள் விடயத்தையும் ஜெயலலிதா கடிததத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜெயலலிதா மோடியிடம் கோரிக்கை...
Reviewed by Author
on
January 02, 2016
Rating:
Reviewed by Author
on
January 02, 2016
Rating:


No comments:
Post a Comment