உயிலங்குளம்-அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி-இருவர் படுகாயம்.
உயிலங்குளம்-அடம்பன் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு இடம் பெற்ற விபத்தில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.சுமனசேகர தெரிவித்தார்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(1) இரவு 8.10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும் இவ் விபத்தில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப்பு சந்தியோகு (வயது-51) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.சுமனசேகர தெரிவித்தார்.
சம்பவ தினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு குறித்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டியில் அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் ஒன்றில் இருவர் அதி வேகமாக பயணித்த போது குறித்த துவிச்சக்கர வண்டியில் பயணித்தவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
-இதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஜோசப்பு சந்தியோகு (வயது-51) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்ததோடு,மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இருவரும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
-உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிலங்குளம்-அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி-இருவர் படுகாயம்.
Reviewed by NEWMANNAR
on
January 02, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 02, 2016
Rating:


No comments:
Post a Comment