மின்சாரம் தாக்கி விஞ்ஞானி உயிரிழப்பு: 1 மில்லியன் பவுண்ட் இழப்பீடு வழங்கிய மின் நிறுவனம்
பிரித்தானியாவின் எசெக்ஸ் மாகாணத்தில் அதி வேக மின்சாரம் தாக்கி உயிரிழந்த விஞ்ஞானிக்கு மின் நிறுவனம் இழப்பீடாக 1 மில்லியன் பவுண்ட் வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள சோள வயலில் 41 வயதான விஞ்ஞானி ஜேம்ஸ் கியூ ஜாகிங் சென்றுள்ளார்.
அந்த வயலில் 11,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடப்பதை ஜேம்ஸ் கண்டுகொள்ள தவறியதாக கூறப்படுகிறது.
ஜாகிங் சென்ற அவர் மின் கம்பியில் மிதித்து சம்பவ இட்த்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் இறப்பதற்கும் 17 நிமிடங்கள் முன்னதாக பிரித்தானியா மின் துறை மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டிருந்தால் ஜாகிங் செல்பவர்கள் கவனிக்க வேண்டி எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் ஜேம்ஸ் விவகாரத்தில் அந்த வயலின் உரிமையாளர் தனது வயலில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடப்பதை கண்டு சரி செய்யாமல் விட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் பிரித்தானியா மின் துறையின் அலட்சிய போக்கினை கடுமையாக எச்சரித்துள்ளார்.
மின் கம்பிகள் அறுந்து கிடப்பதை சரி செய்வதை விடுத்து பிரித்தானியா மின் துறை மின்சாரத்தை துண்டிப்பது வேடிக்கையானது என்றுள்ளார்.
மின் துறையின் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கினை கடுமையாக சாடிய நீதிபதி இழப்பீடாக ஜேம்ஸ் குடும்பத்திற்கு 1 மில்லியன் பவுண்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான தீக்காயங்களுடன் உயிரிழந்த ஜேம்ஸ் உயிரியல் விஞ்ஞானியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்கி விஞ்ஞானி உயிரிழப்பு: 1 மில்லியன் பவுண்ட் இழப்பீடு வழங்கிய மின் நிறுவனம்
Reviewed by Author
on
January 28, 2016
Rating:
Reviewed by Author
on
January 28, 2016
Rating:






No comments:
Post a Comment