அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தோட்டக்காடு பகுதியில் மர்மப்பொருள்! அடையாளம் காணப்பட்ட இடம் தோண்டல்-Photos

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள தோட்டக்காடு கிராம அலுவலகர் பிரிவுப் பகுதியில் காணப்பட்ட காட்டுப் பகுதியில் மர்மப்பொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த அடையாளம் காணப்பட்ட பகுதி மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இன்று மாலை தோண்டப்பட்ட போதும் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் தோட்டக்காடு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்பட்ட கள்ளுத் தவரணைக்கு முன்பாக உள்ள புகையிரத கடவைக்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் பாரிய உடை மரங்களுக்கு கீழ் மர்மப்பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன், குறித்த இடத்தில் பாதுகாப்புக்களை பலப்படுத்தியதோடு, இவ்விடயம் தொடர்பாக பொலிஸார், மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியை தோண்டுவதற்கான நடவடிக்கைளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இட்டன் பீரிஸ் உட்பட பொலிஸ் அதிகாரிகள் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் முழுமையாக தோண்டப்பட்டது.

எனினும் நீண்ட நேரமாக குறித்த பகுதி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்ட போது உடைக்கப்பட்ட தேங்காய் துண்டுகள் இரண்டு மாத்திரமே குறித்த அகழ்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை சூழ்ந்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக தோண்டப்பட்ட போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.

குறித்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் காணப்பட்டது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




மன்னார் தோட்டக்காடு பகுதியில் மர்மப்பொருள்! அடையாளம் காணப்பட்ட இடம் தோண்டல்-Photos Reviewed by NEWMANNAR on January 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.