தமிழ் மக்கள் பேரவை தயாரித்த அரசியல் தீர்வுத் திட்டத்தின் முன்வரைபு இன்று வெளியீடு
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பொது மக்கள் முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடக்கு மாகாணசபை யின் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ் வரன் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட முன்வரைபானது தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் கருத்துக்களை அறிவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடக்கு மாகாணசபை யின் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ் வரன் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த அரசியல் தீர்வுத் திட்டத்தின் முன்வரைபு இன்று வெளியீடு
Reviewed by NEWMANNAR
on
January 31, 2016
Rating:

No comments:
Post a Comment