அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்,யுவதிகளுக்கான அரச வேலைவாய்ப்புக்கள் விரைவில் வழங்கப்படும்-அமைச்சர் ஹபீர் காசிம்.(படம்)

மன்னார்,வவுனியா மாவட்டங்களில் வாழும் படித்த இளைஞர் யுவதிகளுக்கான அரச வேலை வாய்ப்புக்களை சில கட்சி அமைப்பாளர்கள் மூலமும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரும்,அரச தொழில் முயற்சி அமைச்சருமான ஹபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிற கொத்தாவில் கடந்த புதன் மாலை நடந்த மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களின் அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பொழுதே கட்சியின் பொதுச் செயலாளரும்,அரச தொழில் முயற்சி அமைச்சருமான ஹபீர் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளர் அல்ஹாஜ் ஏ.சி.அப்துல் கபூர்,வவுனியா மாவட்ட அமைப்பாளர் பீ.கருனதாச,ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,கட்சியின் வன்னி மாவட்ட முஸ்ஸீம் பிரதேசங்களுக்கான முகாமையாளருமான ஏ.சமீயூ முகம்மது பஸ்மி,கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான எம்.எம்.சிவலிங்கம்,முகம்மது மாகீர் மன்னார் இளைஞர் அணி ஒருங்கினைப்பாளர் பெர்ணான்டோ கூஞ்ச உற்பட பல முக்கியஸ்தர்கள் மேற்படி உயர் மட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையான படித்த இளைஞர்,யுவதிகள் உள்ளனர்.கடந்த கால ஆட்சியின் பொழுது நியாயமற்ற அரசியல் காரணங்களுக்காக மேற்படி படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களில் உரிய இடம் வழங்கப்படவில்லை.

கடந்த காலத்தில் அரசியல் பழிவாங்கள் மிக மோசமாக தலை விதித்தாடியது.தற்போது அதற்கு பரிகாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் பாதீக்கப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு விசேட கருமபீடம் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனது அமைச்சுக்கு உற்பட்ட இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் மன்னார் நகரில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

குறித்த அலுவலகத்தை நான் மன்னார் நகருக்கு விஜயம் செய்து திறந்து வைக்கவுள்ளேன்.மேலும் முல்லைத்தீவு ஒட்டு சுட்டானில் ஓட்டுத்தொழிற்சாலையும் நான் மீள ஆரம்பிக்கவுள்ளேன்.வன்னி மாவட்டத்தின் அரசாங்க திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் அனைத்தும் கட்டம் கட்டமாக நிரப்பப்படும்.

விரைவில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர் யுவதிகளுக்கான அரச வேலை வாய்ப்புக்கள் விரைவில் வழங்கப்படும்.அச்சமயங்களில் தேவைக்கேற்றவாறு மாவட்ட அமைப்பாளர்கள் மூலமும் குறித்த நியமனங்கள் வழங்கப்படும்.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைகளை மாவட்டங்கள் தோறும் ஸ்தாப்பிப்பதற்கு அந்த மாவட்ட அமைப்பாளர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.வன்னி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக்கட்சி நிருவாக மட்டத்தில் எவ்வித மாற்றங்களும் தற்போதைக்கு செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை.

வன்னி மாவட்ட அமைப்பாளராக ஏ.சி.அப்துல் கபூர்,மன்னார் மாவட்ட அமைப்பாளராக ஏ.சமீயூ முகம்மது பஸ்மி,மற்யுறும் வவுனியா மாவட்ட அமைப்பாளராக பீ.கருனதாச,முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராக எம்.ஜமால்தீன் நிசாம் ஆகியோர் தொடர்ந்தும் செயற்படுவார்கள்.

குறித்த அமைப்பாளர்கள் அர்பண சிந்தனையுடன் செயற்பட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி கட்சியின் நற்பெயருக்கும்,வளர்ச்சிக்கும் பெரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரும்,அரச தொழில் முயற்சி அமைச்சருமான ஹபீர் காசிம் மேலும் தெரிவித்தார்.



( மன்னார் நிருபர்)

(31-1-2016)




மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்,யுவதிகளுக்கான அரச வேலைவாய்ப்புக்கள் விரைவில் வழங்கப்படும்-அமைச்சர் ஹபீர் காசிம்.(படம்) Reviewed by NEWMANNAR on January 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.