அண்மைய செய்திகள்

recent
-

"அதிர்ச்சி" ’பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 600 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்’: காரணம் என்ன?


பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 600 விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் போதியை சலுகைகள் இல்லாத காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து அந்நாட்டு விவசாயிகள் ஒன்றுக்கூடி அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில், ‘பிரான்ஸில் புற்றுநோய் மற்றும் இதய நோய் உயிரிழப்புகளுக்கு அடுத்ததாக மூன்றாவதாக உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயத்துறையில் தான்.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.

இந்த தற்கொலை நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்த Jacques Jeffredo என்ற விவசாயி ஒருவர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஒவ்வொரு ஆண்டில் விவசாயிகள் தற்கொலை செய்யும் எண்ணிக்கையை அரசு 200 என தவறாக மதிப்பிட்டுள்ளது.

ஒட்டுமொத்த மக்களுக்கு உணவளிக்க விவசாயிகள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

உண்மையில் இது வேதனை அளிக்க கூடிய நிகழ்வாகும். இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

Louis Ganay என்ற மற்றொரு விவசாயி கூறுகையில், ‘ஒவ்வொரு நாள் அதிகாலை எழுந்து விவசாயம் செய்து வருகிறோம். ஒவ்வொரு வாரமும் சுமார் 80 மணி நேரங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.

ஆனால், எங்களுக்கு ஊதியமாக கிடைப்பது என்னவோ 200 முதல் 300 யூரோ வரை தான். இந்த ஊதியத்தை வைத்து எப்படி ஒரு விவசாயி வாழ்க்கையை நடத்த முடியும்?

என்னிடம் சொந்தமாக இருந்த 50 பசுமாடுகள் கடந்த 2014ம் ஆண்டு இறந்து போய்விட்டன. இந்த இழப்பு என்னை மிகவும் பாதித்து பெரும் மன உளைச்சலுக்கு தள்ளி விட்டது.

என்னிடம் வருமானத்திற்குரிய மூலதனம் போன பிறகு, இனியும் எதற்கு உயிர் வாழ வேண்டும்’ என வேதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்காக கடுமையாக உழைத்து இறுதியில் எந்த பயனையும் அடையாது விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, அதிகரிக்கும் தற்கொலையை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என Louis Ganay தெரிவித்துள்ளார்.
"அதிர்ச்சி" ’பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 600 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்’: காரணம் என்ன? Reviewed by Author on February 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.