அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரித்தால் எங்களுக்கும் அதிகரிக்க வேண்டும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் -


பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென நிர்வாக தொழில் வல்லுனர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்
அவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படாத பட்சத்தில் எதிர்காலத்தில் வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியர்கள் பொதுமக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஆனால் வைத்தியர்களுக்கு மிகவும் குறைந்தளவு சலுகைகளே அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் குறைந்த அளவு கல்வி தரத்தினை உடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விட, உயர் கல்வி தகமைகளையுடைய வைத்தியர்களுக்கான சலுகைகளை தற்போதைய அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இதை உடனே தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளவேண்டும் என்பதே எமது சங்கத்தின் ஒட்டுமொத்த தீ்ர்மானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு 19 நிர்வாக தொழிற்துறை ஒன்றியத்தின் நிர்வாகிகளை அடுத்த வாரம் கொழும்பிற்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரித்தால் எங்களுக்கும் அதிகரிக்க வேண்டும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - Reviewed by Author on March 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.