அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்....
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை காலை 07.00 மணிக்கு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் வளாகத்தில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக, மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு தெரிவித்துள்ளன.
இதில் வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பங்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்....
Reviewed by Author
on
March 06, 2016
Rating:

No comments:
Post a Comment