அண்மைய செய்திகள்

  
-

எனக்கும் இளவரசி டயானாவுக்கும் இடையே உறவு இருந்தது: முன்னாள் செர்பிய டென்னிஸ் வீரர் பேட்டி


செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஒருவர் தனக்கும், இளவரசி டயானாவுக்கும் இடையே உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Slobodan Živojinović என்ற 52 வயதான செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் தெரிவித்துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இளவரசர் சார்லஸுடன் டயானாவுக்கு திருமணமான பின்னரும், இந்த உறவு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செர்பிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 1980களின் இறுதியில், நான் விம்பிள்டனில் விளையாடியபோது அவர் எனது ஆட்டத்தை பார்த்து ரசித்தார்.

இதன் பின்னரே நாங்கள் இருவரும் மிக நெருங்கி பழக தொடங்கினோம். டயானா எனது டென்னிஸ் ஆட்டத்தை வி.ஐ.பி-க்கான இடத்தில் அமர்ந்து பார்க்கமாட்டார்.

விஐபி இருக்கையில் அமர்ந்து பார்த்தால் நான் தொலைவில் தெரிவேன் என்ற காரணத்தால், அவர் டென்னிஸ் கோர்ட் அருகே உள்ள சாதாரண இருக்கையில் அமர்ந்து என் ஆட்டத்தை ரசித்தார்.

1987ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டிக்கு முன்னதாக அவர் என்னுடன் பேசினார். அவர் ஒரு அற்புதமான பெண்.

அவருடன் நான் எதை பற்றி வேண்டுமானாலும் பேச முடிந்தது.சாதாரண எளிய விடயங்களை அவரிடம் பேசினாலும் அதில் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும்.

அவர் தற்போது நம்முடன் இல்லாத காரணத்தால் நான் அவரை பற்றி விரிவாக பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் இளவரசி டயானாவுக்கும் இடையே உறவு இருந்தது: முன்னாள் செர்பிய டென்னிஸ் வீரர் பேட்டி Reviewed by Author on April 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.