சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! பிரதான கட்சிகள் ஆதரவு வழங்குமா?
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இல்லை என பிரதான அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்யைில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரா.சம்பந்தனுக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்படும் பட்ச்த்தில் அதற்கு பிரதான கட்சிகள் ஆதரவு வழங்குமா என்பது தொடர்பில் பிரதான கட்சிகள் ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளன.
சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்தாலும் ஆதரிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை.
அத்துடன், நாடாளுமன்றத்தில் தனிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத நபர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய பிரதான கட்சிகள் தெரிவித்துள்ளன.
சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! பிரதான கட்சிகள் ஆதரவு வழங்குமா?
Reviewed by Author
on
April 30, 2016
Rating:

No comments:
Post a Comment