இலங்கைக்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர் யோசனை...
இலங்கைக்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானியாவில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டுமென பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரோம் கொபின் பரிந்துரை செய்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் மனித உரிமை மீறல்கள் முற்றுமுழுதாக நின்றுவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சிக்கான தமிழர் என்ற அமைப்புடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதே தமது கேள்வி என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர் யோசனை...
Reviewed by Author
on
April 14, 2016
Rating:

No comments:
Post a Comment