வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்....
வவுனியாவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நபரொருவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 59 வயதையுடைய காளிமுத்து இராமச்சந்திரன் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்....
Reviewed by Author
on
April 08, 2016
Rating:

No comments:
Post a Comment