அவதானமாக புத்தாண்டு விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு கோரிக்கை
அவதானமாக புத்தாண்டு விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நிபுணத்துவ டொக்டர் அனில் ஜாசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழமையானதாகும்.
விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து ஏற்பாட்டாளர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென டொக்டர் ஜாசிங்க ஊடகங்களின் மூலம் கோரியுள்ளார்.
சைக்கிளோட்டம், சறுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, மரதன் ஓட்டம் போன்ற போட்டிகளின் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டிகளில் பங்கேற்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், தேவையான முதலுதவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவம் அவர் தெரிவித்துள்ளார்.
அவதானமாக புத்தாண்டு விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
April 15, 2016
Rating:
No comments:
Post a Comment