கிளிநொச்சியில் மோட்டார் வாகன விபத்தில் : 2 மாணவர்கள் பலி
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்ட உந்துருளி விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
டிஸ்கவரி உந்துருளியில் அதிக வேகமாக பயணித்து 17 வயது சிறுவர்கள் இருவரும் வீதி வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளை வேகத்தை கட்டுப்படுத்த முடியாது அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதுண்டு படுகாயமடைந்து நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இரு சிறுவர்களில் ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் அதிக வேகமாக பயணித்த அவர்கள் கிருஸ்ணபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீதி வளைவில் திருப்ப முற்பட்ட போது அவர்களால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போய்விட்டது என்று சம்பவத்தை பார்த்த பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி சம்பத்தில் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜோன் கந்தசாமி டிலக்சன் மற்றும் மலையாளபுரம் வடக்கைச் சேர்ந்த விஸ்வநாதன் ஜனார்த்தன் ஆகிய சிறுவர்களே இறந்துள்ளனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி, பாரதிபுரம் மகா வித்தியாலயத்தில் இறுதியாக இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரம் பரீட்சை தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரது உடல்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் மோட்டார் வாகன விபத்தில் : 2 மாணவர்கள் பலி
Reviewed by NEWMANNAR
on
April 15, 2016
Rating:

No comments:
Post a Comment