அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த இளைஞன் தனது பிறந்த நாள் அன்று விபத்தில் மரணம்- Photos


தனது பிறந்த தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) மாலை இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கி மரணமான சம்பவம் ஒன்று மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் அக்கிராம மக்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,

முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் என அழைக்கப்படும் ஜேசுதாசன் பேசி சந்துரு ரெவல் என்ற இளைஞனின் 27 ஆவது பிறந்த தினம் நேற்று(17-04-2016) ஞாயிற்றுக்கிழமையாகும்.

குறித்த இளைஞன் தனது பிறந்த நாள் பார்ட்டியை சக நண்பர்களுடன் அன்றைய தினம் மதியம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது பிறந்த நாள் பார்ட்டி முடிவடைந்த நிலையில் தனது சக நண்பன் ஒருவனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மீண்டும் முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரம் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

எனினும் தனது 27 ஆவது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் கொண்டாடிய (நந்தீஸ்) என அழைக்கப்படும் ஜேசுதாசன் பேசி சந்துரு ரெவல் என்ற இளைஞன் உயிர் இழந்தார்.

எனினும் மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த ஜேசுதாசன் பேசி சந்துரு ரெவல்(வயது-27)என்ற இளைஞனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் மோட்டார் சைக்கிலில் அதி வேகமாக சென்றதன் காரணத்தினால் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.








மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த இளைஞன் தனது பிறந்த நாள் அன்று விபத்தில் மரணம்- Photos Reviewed by NEWMANNAR on April 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.