தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -தமிழ் தரப்புக்களும் மனட்சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்- ஜீ.குணசீலன்.-Photos
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து தமிழ் அரசியல் தரப்புக்களும் மனட்சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க இன்று வியாழக்கிழமை காலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற மாகாண சபை உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
புத்தாண்டு தினமான இன்று (14) வியாழக்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவின் முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் விசேட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
குறித்த குழுவினருடன் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை குறித்து வடமாகாண சபை மற்றும் வடமாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் வாதிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனுiராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அனுராத புரம் சிரைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தமது விடுதலை குறித்து அரசியல் வாதிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் இது வரை வெற்றி பெறாத நிலை காணப்படுபின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை மேற்கொள்வதை விடுத்து எமது விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதகாரிகள் முனைப்புக்களை மேற்கெதள்ள வேண்டும்.
மேலும் அரசியல் கைதிகளாகிய எமது குடும்பங்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே எவ்வித பாடுபாடுகளும் இன்றி அனைவருக்கும் வடமாகாண சபை நலன் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனுராத புரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கு சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகளை புத்தாண்டு தினமான இன்று(14) சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
இவர்கள் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இரு அரசியல் கைதிகள் எவ்வித விசாரனைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சக அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே நல்லாட்சி அரசின் இக்கால கட்டத்தில் குறித்த அரசியல் கைதிகளின் விசாரனைகள் துரிதப்படுத்தப்பட்டு குறித்த அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதனை விடுத்து பல வருடங்களாக எமது தமிழ் அரசியல் கைதிகள் உரிய விசாரனைகள் இன்றி தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினை நாங்கள் ஒரு போதும் எற்றுக்கொள்ள முடியாது.
எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மனச்சாட்சியுள்ள அனைத்து தமிழ் தரப்புக்களும் உரிய நடவடிக்கையினை மேற்கோண்டு,அவர்களை தமது குடும்பங்களுடன் இணைத்து நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -தமிழ் தரப்புக்களும் மனட்சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்- ஜீ.குணசீலன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 15, 2016
Rating:

No comments:
Post a Comment