அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாடு தேர்தலில் ஆளும் அதிமுக முன்னிலை! அதிமுக 139, திமுக 74 தொகுதிகளில் முன்னிலை!


திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 139 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் திமுகவே முன்னிலை பெற்று வருகிறது.

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்து வருகிறார்.

Live Tamil Nadu Election Results 2016
திருக்கோவிலூரில் 4000 வாக்குகளும், கொளத்தூரில் 6 வாக்குகளும், சேப்பாக்கத்தில் 1843 வாக்குகளும் பெற்று திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

பல்லடம் 500 வாக்குகளும், உதகமண்டலம் 485 வாக்குகளும் பெற்று அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Live Feed
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - 2016

May 19, 20163 minutes ago
அதிமுக 134 இடங்களிலும், திமுக 83 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

May 19, 20167 minutes ago
மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணி 369 வாக்குகள் முன்னிலை, கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வானதி சீனிவாசன் பின்னடைவு, மேட்டூர் தொகுதியில் பாமக ஜி.கே.மணி பின்னடைவு.

May 19, 201618 minutes ago
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன, மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணி 369 வாக்குகள் முன்னிலை.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்னடைவு.

May 19, 201624 minutes ago
ஆவடி தொகுதியில் மாபா பாண்டியராஜன் முன்னிலை, திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸ் 2082 வாக்குகள் முன்னிலை.

May 19, 201625 minutes ago
புதுச்சேரியில் காங்கிரஸ் 5 இடத்தையும், என்.ஆர்.காங்கிரஸ் 3 இடத்தையும், அதிமுக 1 இடத்தில் வெற்றி.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

May 19, 201627 minutes ago
அதிமுக 139 இடங்களிலும், திமுக 79 இடங்களிலும், தேமுதிக 3 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றது.


தமிழ்நாடு தேர்தலில் ஆளும் அதிமுக முன்னிலை! அதிமுக 139, திமுக 74 தொகுதிகளில் முன்னிலை! Reviewed by Author on May 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.