ஐபிஎல் 2016: விருது பெற்றவர்கள் முழு விபரங்களுடன்.......
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நிறைவு பெற்ற நிலையில், பெங்களூருவில் நடந்த இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் முதல்முறையாக வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி சாம்பியன் கிண்ணத்தை தட்டிச்சென்றது. கிண்ணத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி தலைமையிலான றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை தவறவிட்டது.
எனினும், ஐபிஎல் 2016 தொடரின் முடிவில் விராட் கோஹ்லி மூன்று விருதுகளை தட்டிச்சென்றுள்ளார். தொடர் நாயகன் விருது, அதிக சிக்சர் விருது, அதிக ஓட்டங்கள் குவித்தது என மூன்று விருதுகளை தட்டிச்சென்றார்.
தொடரில் சிறப்பாக பந்தை பிடித்ததற்கான விருது: குஜராத் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாக விளையாடிய அணிக்கு வழங்கப்படும் விருது: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தட்டிச்சென்றது.
வளர்ந்து வரும் வீரருக்கான விருது: ஐதராபாத் அணி பந்துவீச்சாளர் Mustafizur கைப்பற்றினார்.
சிறந்த பீல்டர் விருது: பெங்களூர் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பெற்றார்.
மிக விரைவாக 50 ஓட்டங்கள் குவித்ததற்கான விருது: டெல்லி வீரர் கிறிஸ் மோரிஸிக்கு வழங்கப்பட்டது.
அதிக விக்கெட்டுக்கான விருது: ஐதராபாத் நட்சத்திர பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார்.
மிக கவர்ச்சியான ஷாட் அடித்ததற்கான விருது: ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2016: விருது பெற்றவர்கள் முழு விபரங்களுடன்.......
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment