அண்மைய செய்திகள்

recent
-

முதன்முறையாக பங்கேற்ற முதலமைச்சர் ஆனோல்ட் விதண்டாவாதம்; முதலமைச்சர் வெளிநடப்பு....


யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்ற முதலமைச்சர் சி.வி. விக் னேஸ்வரன், மாகாணசபை உறு ப்பினர் ஆனோல்டின் விதண்டா வாதத்தால் கூட்டத்தை திடீரென நிறுத்தி விட்டு வெளியேறினார்.

யாழ்ப்பாண பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் யாழ்.பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் முதலமைச்சர் உரையாற்றும் போது,
நான் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்குபற்றுவது இதுவே முதற்தடவை. நாம் அனை வரும் மக்களின் நலனுக்காக ஒரு ங்கிணைந்து செயற்படுவதற்கு விரும்புகிறேன். எமது அலுவலர்களுக்கு மாகாணசபை சம்பளம் கொடுக்கின்றது. ஆனால் அவர்கள் அரச அதிபருடனும் பிரதேச செயலருடனும் வேலைசெய்கிறார்கள். அவ்வாறு பல வழிகளில் ஒருமித்து செயற்படுகிறோம்.

முடிந்தளவுக்கு வித்தியாசம் வேற்றுமைகளை முன்வைக்காது மக்களின் நன்மை கருதி சகல நட வடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
உதாரணமாக பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எம்முடன் சேர்ந்து பல நடவடிக்கை களைமுன்னெடுத்துவருகிறார்.   அந்த வழியில்தான் நாம் எல்லோரும் செல்லவேண்டும்.
இது எமது மாகாணம், எம் மக்களுக்குரிய விடயங்களை செய்து கொண்டிருக்கும் போது ஒருமித்து காரியங்களை செய்யவேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்தார்.

அதனையடுத்து சிறுவர் விவ கார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கை யில், கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்குநான் சமுகமளிக்க விரும்பவில்லை.
ஏனெனில் பிரதேசமக்கள் பாதிக்கப்பட்டதால் பிரதேச செயலரை மாற்றினோம். அவரைபற்றி பல முறைப்பாடுகள் எமக்குகிடைக்கப் பெற்றது. பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாக்குகளில் தான் நாம் பாராளுமன்றம் சென்றுள்ளளோம். எனவே அவர்களுக்குரிய திட்டம் என்னவென்றாலும் முன் னுரிமை வழங்கவேண்டும்.

பிரதேச செயலகங்கள் அரச நிறுவனங்களில் தீர்வுகிடைக்காத பட்சத்தில் அரசியல்வாதிகளை தேடிமக்கள் செல்கின்றனர். எனவே கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கருத்து ஒன்றினை முன்வைத்தார். அரச அலுவலரின் இடம்மாற்றம் பற்றி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் அந்த அலுவலர்  இன் னும் ஒருபிரதேசசெயலகத்தில் கட மையாற்றிவருகிறார். அவருடனான அமைச்சரின் முறைப்பாட்டை வன் மையாக கண்டிக்கிறோம். அந்த அலுவலர் ஒரு சாராருக்கு பிழையாக தெரிந்தாலும் அவர் பலருக்கு சிறந்த அதிகாரியாக காணப்படுகிறார்.

இப்போது இருப்பவரில் குற்றம் காணப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டால் இவ்வாறு தொடர்சியாக குற் றச்சாட்டுக்;கள் தொடர்ந்து கொண்டிருக்கும். பெண்ணாக துணிச்சலாக கடமையாற்றிய ஒருபிரதேச செய லரை இவ்வாறு சொல்வது ஏற்றுக் கொள்ளமுடியாது என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதி அமைச் சர் விஜயகலா மகேஸ்வரன் அவ ரும் பெண்தான். நானும் பெண் தான. எனது அலுவலகத்துக்கு வந்த பல முறைப்பாடுகளுக்கு இணங்கத் தான் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதை விடுத்து தனிப்பட்ட பகை எதையும் குறித்து வாதாடவர வில்லை எனத் தெரிவித்தார்.

இருவரின் கருத்தையடுத்து அதை நிறைவுக்குகொண்டு வரு வதாக தெரிவித்த முதலமைச்சர் குறித்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து ஒருங் கிணைப்பு குழு கூட்டம் தொடர்ச்சியாக சுமுகமானமுறையில் இடம்பெற்றது. கூட்டம் நிறைவு செய்வதற்கான நேரம் நெருங்கிய நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் கருத்தொன்றை தெரிவிப்பதற்கு ஆயத்தமானர்.

அதாவது கூட்டத்தின் ஆரம்பத்தில் தவறான அபிப்பிராயம் ஒன்றுபதிவு செய்யப்பட்டுள்ளது.
அதை மாற்றவேண்டும் என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் அதைப்பற்றி மேலதிகமாக கதைக்க தேவையில்லை என தெரிவித்த போது தொடர்ச்சியாக ஆனோல்ட் விதண்டாவாதமாக தனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்க முதலமைச்சர் கடும் தொனி யில் அதை நிறுத்துமாறு தெரிவித்தார்.
அதைபொருட்படுத்தாது உறுப் பினர் ஆனோல்ட் விடாப்பிடியாக நின்றதையடுத்து முதலமைச்சர் கூட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதை தொடர்ந்து அதிகாரிகளும் வெளியேறினர்.

குழப்ப நிலையை புரிந்து கொண்ட பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இடையில் கூட்டத்தை முடிக்கமுடியாது என தெரிவித்து தொடர்ந்து கூட்டத்தை சிறுநேரம் வரை நடத்தி மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் கூட்டத்தை நிறைவு செய்தார்.  
         
முதன்முறையாக பங்கேற்ற முதலமைச்சர் ஆனோல்ட் விதண்டாவாதம்; முதலமைச்சர் வெளிநடப்பு.... Reviewed by Author on May 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.