மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும்! ஜனாதிபதி....
தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய படைவீரர்கள் தினம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூரும் தினம் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற மைதானத்திலுள்ள படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போர் வெற்றி ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் மரணங்கள் கவலையளிப்பதாகவே உள்ளது.
அரசாங்கம் படைவீரர்களை வேட்டையாட ஆயத்தமாகி வருவதாக இன்று குற்றம் சுமத்தும் தரப்பினரே அன்று பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி படைவீரர்களை சிறையில் அடைத்தார்கள்.
தாய் நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்வதற்கு உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் எப்போதும் பின்நிற்காது.
கல், மண், சீமெந்தைக் கொண்டு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது.
இன்று நேற்றல்ல வரலாற்றுக் காலம் தொடக்கம் சிங்கள, தமிழ் மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளும், மோதல்களும் இடம்பெற்றுள்ளன.
இன்று யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இனங்களுக்கிடையே அவசர அவசரமாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது.
அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இனங்களிடேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
இது இலகுவானதல்ல. கடுமையான சவால் மிக்கது. அதனால் அரசாங்கம் இதனை ஒருபோதும் கைவிடமாட்டாது.
மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும்! ஜனாதிபதி....
Reviewed by Author
on
May 19, 2016
Rating:
Reviewed by Author
on
May 19, 2016
Rating:


No comments:
Post a Comment