இரண்டு வருடங்களின் பின் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் படகு
இலங்கையில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவை நேற்றுக் காலை அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் மோசமான கால நிலைக்கு மத்தியில் நேற்றுக் காலை 10.45 மணியளவில் இந்த அகதிகள் படகு கொகோஸ் தீவுக்குள் நுழைந்ததாக நேரில் கண்ட கொகோஸ் வாசிகள் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கொகோஸ் தீவுக்கு சென்றிருக்கும் முதல் அகதிகள் படகு இதுவாகும்.
நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான இந்தப் படகில் 12 பேர் வரை வந்திருக்கலாம் என்றும் நேரில் கண்ட கொகோஸ் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 அல்லது 11 மீற்றர் நீளமான இந்த மரப்படகு 12 தொடக்கம் 15 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்ததாகவும், தற்போது இந்தப் படகு, ஹோம் தீவில் இருந்து 500 மீற்றர் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் படகுகளைத் தடுப்பதற்கான கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருந்த நிலையில், இந்தப் படகு கொகோஸ் தீவை அடைந்திருப்பது அவுஸ்திரேலியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்தப் படகுப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனரா அல்லது கைது செய்யப்பட்டனரா என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இரண்டு வருடங்களின் பின் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் படகு
Reviewed by NEWMANNAR
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment