பிரித்தானியாவில் அதிக செல்வாக்கு பெற்றவர் மகாராணியா? குட்டி இளவரசியா?
பிரித்தானிய பொதுமக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவமுள்ள நபர்களின் பட்டியலில் மகாராணியை பின்னுக்கு தள்ளி குட்டி இளவரசி சார்லோட் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவியான இளவரசி கேட் மிடில்டன்னிற்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்த குட்டி இளவரசி சார்லோட் தனது குடும்ப உறுப்பினர்களை விட பொதுமக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்று வருகிறார்.
சார்லோட் பிறந்தது முதல், அவரை மையப்படுத்தி பல பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்து பட்டையை கிளப்பியது.
குறிப்பாக, சார்லோட் அணியும் உடுப்புகள், ஆபரணங்கள் மற்றும் அவர் எவ்வாறு சிகை அலங்காரம் செய்துக் கொள்கிறார் என்பதை நன்கு கவனித்து அவற்றை போலவே லட்சக்கணக்கான பொருட்கள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இதன் மூலம், தனது பெற்றோர் மற்றும் மகாராணியான இரண்டாம் எலிசபெத் ஆகியவர்களின் செல்வாக்கை விட பொதுமக்கள் மத்தியில் குட்டி இளவரசியின் மதிப்பும் செல்வாக்கும் உயர்ந்துள்ளது.
பிரித்தானிய சந்தை நிலவரத்தை கண்காணித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடும் Brand Finance என்ற தனியார் நிறுவனம் குட்டி இளவரசியின் மதிப்பு என்ன என்பது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், பிரித்தானிய பொருளாதாரத்தை வளர்ப்பதில் குட்டி இளவரசிக்கு சுமார் 3.2 பில்லியன் பவுண்ட்(6,74,02,95,11,040 இலங்கை ரூபாய்) அளவிற்கு மதிப்பு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
குட்டி இளவரசியின் சகோதரரான இளவரசர் ஜோர்ஜின் மதிப்பு 2.4 பில்லியன் பவுண்ட் என்ற அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், பிரித்தானிய அரச பரம்பரையில் பொதுமக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மற்றும் மதிப்பை பெற்றுள்ளவர்களின் பட்டியலில் குட்டி இளவரசி சார்லோட் முதல் இடத்தை பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் அதிக செல்வாக்கு பெற்றவர் மகாராணியா? குட்டி இளவரசியா?
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment